கரோனா நோயாளிகளுக்கு முத்த சிகிச்சை அளித்த பாபாவையே வீழ்த்திய கரோனா; அது மட்டுமா?

நான்கரை லட்சம் பேரின் உயிரை மாய்த்த கரோனாவுக்கு முத்த சிகிச்சை அளித்து குணப்படுத்துவதாகக் கூறிய பாபா கரோனாவுக்கு பலியாகியுள்ளார்.
கரோனா நோயாளிகளுக்கு முத்த சிகிச்சை அளித்த பாபாவையே வீழ்த்திய கரோனா; அது மட்டுமா?


உலகம் முழுவதும் சுமார் 77 லட்சம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு இதுவரை நான்கரை லட்சம் பேரின் உயிரை மாய்த்த கரோனாவுக்கு முத்த சிகிச்சை அளித்து குணப்படுத்துவதாகக் கூறிய பாபா கரோனாவுக்கு பலியாகியுள்ளார்.

கரோனாவில் இருந்து தப்பிக்க முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது போன்றவைதான் உதவும் என்று அரசுகளும், மருத்துவர்களும் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் நிலையில், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த அஸ்லாம் பாபா, கரோனா நோயாளிகளின் கையில் முத்தமிடுவதன் மூலம் அந்த நோயைக் குணப்படுத்த முடியும் என்று கூறி வந்தார்.

ஏராளமானோர் அவரிடம் முத்தம் வாங்கிச் சென்ற நிலையில், எதிர்பாராத விதமாக, யாரோ ஒரு தீவிர பக்தர், பாபாவுக்கு கரோனாவை பரிசளித்துச் சென்றுள்ளார்.

இவ்வாறு கைகளில் முத்தமிட்டு கரோனாவை ஒழிப்பதாகக் கூறிக் கொண்டிருந்த அஸ்லாம் பாபா ஜூன் 4-ம் தேதி கரோனாவுக்கு பலியானதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அது மட்டுமல்ல, அவரிடம் முத்தம் வாங்கிய மற்றும் நெருங்கிய தொடர்பில் இருந்த 24 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மூட நம்பிக்கையே முத்த சிகிச்சைக்கு காரணம் என்றும், அந்த மூட நம்பிக்கையே பாபாவின் மரணத்துக்கும் காரணமாகிவிட்டது என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com