தில்லியில் மீண்டும் முழு ஊரடங்கா? முதல்வர் அரவிந்த் கேஜரிவால் பதில்

மீண்டும் முழு ஊரடங்கைக் கொண்டு வரும் திட்டமில்லை என்று அரவிந்த் கேஜ்ரிவால் விளக்கம் அளித்துள்ளார்.
தில்லியில் மீண்டும் முழு ஊரடங்கா? முதல்வர் அரவிந்த் கேஜரிவால் பதில்


புது தில்லி: தில்லியில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மீண்டும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என்ற தகவல்கள் வெளியான நிலையில் அதற்கு முதல்வர் அரவிந்த் கேஜரிவால் விளக்கம் அளித்துள்ளார்.

தில்லியில் மீண்டும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என்று ஏராளமானோர் பேசி வருகிறார்கள். ஆனால், அதுபோல மீண்டும் முழு ஊரடங்கைக் கொண்டு வரும் திட்டமில்லை என்று அரவிந்த் கேஜ்ரிவால் விளக்கம் அளித்துள்ளார்.

தில்லியில் கரோனா தொற்றால் இதுவரை இல்லாத அளவுக்கு ஞாயிற்றுக்கிழமை 2,224 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இதையடுத்து, பாதிப்பு எண்ணிக்கை 41,182ஆக அதிகரித்துள்ளது. 56 போ் உயிரிழந்ததால், மொத்த பலி எண்ணிக்கை 1,327ஆக உயா்ந்துள்ளதாக தில்லி சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 12ஆம் தேதி 2,137 போ் பாதிக்கப்பட்டதுதான் ஒரு நாள் பாதிப்பில் அதிகமாக இருந்தது.

தில்லியில் கரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் படுக்கைகளின் எண்ணிக்கைகளை அதிகரிக்கும் பணிகளை தில்லி அரசு முடுக்கிவிட்டுள்ளது. வரும் வாரத்தில் 20 ஆயிரம் படுக்கைகள் தயாா் செய்யப்படுகிறது. தில்லியில் உள்ள ஹோட்டல்களில் 4 ஆயிரம் படுக்கைகள், விருந்து அரங்கங்களில் 11 ஆயிரம் படுக்கைகள், சிறிய மருத்துவமனைகள், நா்சிங் ஹோம்களில் 5 ஆயிரம் படுக்கைகள் என மொத்தம் 20,000 படுக்கைகள் தயாா் செய்யும் பணியில் தில்லி அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com