
லடாக் எல்லை விவகாரம் தொடர்பாக இந்திய- சீன வெளியுறவு அமைச்சர்கள் தொலைபேசி மூலமாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய-சீனப் படைகள் மோதலை அடுத்து எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது.
இதையடுத்து, லடாக் பிரச்னையை முடிவுக்கு கொண்டுவர பேச்சுவார்த்தைக்கு வருமாறு இந்தியாவுக்கு சீனா அழைப்பு விடுத்த நிலையில் இந்திய- சீன உயர்மட்ட அதிகாரிகளின் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இதன் தொடர்ச்சியாக இரு நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்களும் தொலைபேசி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு பேசி வருகிறார்.
சீனத் தாக்குதலுக்கு பிறகு சீன அமைச்சருடன் முதல்முறையாக அமைச்சர் ஜெய்சங்கர் பேசி வருவது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
முன்னதாக, இந்தியா - சீனா இரு நாடுகளும் பேச்சுவார்த்தையின் மூலமாக எல்லைப் பிரச்னையை முடிவுக்கு கொண்டுவர ஒப்புக்கொண்டுள்ளதாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ஜாவோ லிஜியான் தகவல் வெளியிட்டுள்ளார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...