
லடாக் எல்லையில் சீனப் படைகளுடனான மோதலில் இந்திய வீரர்கள் உயிரிழந்தது மன வேதனை அளிப்பதாக அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் திங்கள்கிழமை இரவு இந்திய-சீனப் படைகள் இடையே ஏற்பட்ட கடும் மோதலில் இந்திய ராணுவத்தின் கர்னல் உள்பட ராணுவத்தினர் 20 பேர் வீர மரணம் அடைந்துள்ளனர். இதனால் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது.
சீனப் படைகளுடனான மோதலில் ராணுவ வீரர்களின் வீர மரணத்துக்கு பிரதமர் உள்பட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில்,
'லடாக் எல்லையில் வீர மரணமடைந்த ராணுவ வீரர்களின் தியாகத்தையும், துணிச்சலையும் நாடு ஒருபோதும் மறக்காது. உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவிப்பதோடு, உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு ஆதரவாக இந்த நாடே துணை நிற்கும்.
வீரர்களை இழந்ததது மன உளைச்சலையும், வேதனையையும் தருகிறது. வீரர்கள் கடமையில் அளப்பரிய வீரத்தை வெளிப்படுத்தினர். இந்திய மண்ணைக் காப்பாற்ற அவர்கள் இன்னுயிரை தியாகம் செய்துள்ளனர்' என்று பதிவிட்டுள்ளார்.
லடாக் எல்லை விவகாரம்: அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பிரதமர் மோடி அழைப்பு
மோடி உண்மையைத் தெரிவிக்க முன்வர வேண்டும்: ராகுல் சுட்டுரை
முப்படைகளும் தயார் நிலையில் இருக்க அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவு
லடாக் விவகாரம்: பேச்சுவார்த்தைக்கு வருமாறு இந்தியாவுக்கு சீனா அழைப்பு
சீன எல்லையில் மோதல்: 4 இந்திய வீரர்கள் கவலைக்கிடம்
இந்திய-சீன படைகள் மோதல்: 20 வீரா்கள் பலி