தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

தெலங்கானாவில் இருந்து ரயிலில் 1,200 தொழிலாளர்கள் ஜார்க்கண்ட் பயணம்

தெலங்கானாவில் உள்ள ஜார்க்கண்ட் மாநிலத் தொழிலாளர்கள் இன்று தங்களது சொந்த ஊருக்கு ரயிலில் புறப்பட்டுள்ளனர்.

News image
Updated On :1 மே 2020, 6:12 am

தெலங்கானாவில் உள்ள ஜார்க்கண்ட் மாநிலத் தொழிலாளர்கள் இன்று தங்களது சொந்த ஊருக்கு ரயிலில் புறப்பட்டுள்ளனர்.

கரோனா எதிரொலியாக, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், வெளிமாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்ப மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இதையடுத்து வெளிமாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்ப அந்தந்த மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகிறது. 

அதன்படி, ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தெலங்கானாவில் இருந்து இன்று தங்களது சொந்த ஊருக்கு ரயிலில் புறப்பட்டுள்ளனர்.

தெலங்கானாவின் லிங்கம்பள்ளி என்ற பகுதியில் இருந்து ஜார்க்கண்டின் ஹதியா பகுதிக்கு 24 பெட்டிகளில் 1,200 பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர். அவர்களை தெலங்கானா மாநில அதிகாரிகள், காவல்துறையினர் கைதட்டி மகிழ்ச்சியுடன் வழியனுப்பி வைத்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.