பொது இடங்களில், அலுவலகங்களில் கடைப்பிடிக்க வேண்டியவை

நாடு முழுவதும் மேலும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
பொது இடங்களில், அலுவலகங்களில் கடைப்பிடிக்க வேண்டியவை

நாடு முழுவதும் மே 17 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும், மத்திய அரசு வெளியிட்டுள்ள பட்டியலில் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை நிற மண்டலங்களைப் பொருத்து சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, பொது இடங்களில், அலுவலகங்களில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து அரசு அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.

பொது இடங்களில் கடைப்பிடிக்க வேண்டியவை

பொது இடங்களில் முகக்கவசம் அணிவது அவசியம். 

பொது இடங்களிலும், போக்குவரத்தின் போதும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.

பொது இடங்களில் ஐந்துக்கும் மேற்பட்ட நபர்கள் ஒரு இடத்தில் கூடக்கூடாது திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளில் 50க்கும் மேற்பட்ட நபர்கள் கூடக் கூடாது. மேலும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். 

இறுதிச் சடங்கு நிகழ்வுகளில் 20க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்துகொள்ளக்கூடாது.

பொது இடங்களில் எச்சில் துப்பக்கூடாது. பொது இடங்களில் மது அருந்துவது, பான், குட்கா உபயோகப்படுத்த அனுமதி இல்லை. 

அனுமதிக்கப்பட்ட இடங்களில் மதுக்கடைகள், பான், குட்கா, புகையிலை விற்பனை செய்யும் கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொருவரும் 6 அடி இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். ஒரே நேரத்தில் 5 பேருக்கு மேல் கூடக் கூடாது. 

அலுவலகங்களில் கடைப்பிடிக்க வேண்டியவை

வேலை செய்யும் இடங்களில் முகக்கவசம் அணிவது அவசியம். நிறுவனங்கள் போதுமான முகக்கவசங்கள் இருப்பு வைத்திருக்க வேண்டும். 

பணியிடங்களில், பணியிடங்களுக்குச் செல்லும் போக்குவரத்து வாகனங்களிலும்  சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். 

அலுவலகத்தின் நுழைவாயில், அலுவலக உணவகம், அலுவலகக் கூட்டம் நடக்கும் இடங்கள், கட்டிடத்தின் முன்வாயில்கள், மின் தூக்கிகள் கழிவுநீர்க் குழாய்கள் இருக்கும் இடங்கள், கழிவறைகள் உள்ளிட்ட இடங்கள் சுத்தமாக தொற்று ஏற்படா வண்ணம் இருக்க வேண்டும். 

அலுவலகத்தில் முகக்கவசம் அணிவதோடு, அலுவலகத்தின் அனைத்து இடங்களிலும் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். தேவையான இடங்களில் கை கழுவும் திரவங்கள், கை சுத்தப்படுத்தும் திரவங்களை வைத்திருக்க வேண்டும். 

65 வயதுக்கு மேற்பட்டோர், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் வரக்கூடாது. 

அனைத்து ஊழியர்களும் ஆரோக்கிய சேது மொபைல் செயலியை தங்களது மொபைலில் பதிவிறக்கம் செய்து வைத்திருக்க வேண்டும். அணைத்து ஊழியர்களும் இந்த செயலியை வைத்திருப்பதை நிறுவனத் தலைமை உறுதி செய்ய வேண்டும். 

அலுவலகங்களில் மிகப்பெரிய கூட்டங்கள் அனுமதி நடத்தத் தடை விதிக்கப்படுகிறது. 

ஒவ்வொரு ஷிப்ட்டுக்கும் இடையே நேர  இடைவெளி இருக்க வேண்டும். 

அலுவலகத்தின் அருகில் உள்ள மருத்துவமனைகள், கிளினிக்குகள் இருக்கும் இடங்கள் குறித்த பட்டியல் அலுவலகத்தில் ஒட்டப்பட்டிருக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com