
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அடுத்த ஓராண்டுக்கு 30 சதவீத ஊதியத்தை விட்டுக்கொடுக்க முடிவு செய்துள்ளார்.
கரோனா வைரஸ் நோய்த் தொற்று தடுப்புப் பணிக்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்கெனவே தனது மார்ச் மாத ஊதியத்தை முழுவதுமாக பிரதமர் நிதிக்கு (பிஎம் கேர்) அளித்தார். இந்த நிலையில், ஓராண்டுக்கு 30 சதவீத ஊதியத்தை விட்டுக்கொடுப்பதாக முடிவு செய்துள்ளார்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...