
கோப்புப்படம்
மணிப்பூரில் இன்று அடுத்தடுத்து நிலநடுக்கம் உணரப்பட்டது.
மணிப்பூர் மாநிலத்தின், உக்ருல் பகுதியில் இன்று காலை 10.19 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.0 ஆகப் பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது பூமிக்கடியில் 30 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.
முன்னதாக சேனாபதி பகுதியிலும் இன்று காலை 6.54 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 2.8 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம்கொண்டிருந்தது. எனினும் இந்த இரு நிலநடுக்கத்தால் எவ்வித சேதமும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...