
கோப்புப்படம்
மகாராஷ்டிரத்தில் 3 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை அளித்த 2 சிறுவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மகாராஷ்டிரத்தில் கடந்த 8-ஆம் தேதி 22 வயது இளம் பெண் மூன்று பேரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில், தற்போது சிறுமிக்கு கூட்டுப்பாலியல் வன்கொடுமை சம்பவம் அரங்கேறியுள்ளது.
சிறுமி பாலியல் வன்கொடுமை குறித்து பேசிய மூத்த காவல்துறை அதிகாரி, 3 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை அளித்த 2 சிறுவர்கள் கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். சிறுவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும் கூறினார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...