பிகார் தேர்தலில் வென்றால் இலவச கரோனா தடுப்பூசி: பாஜக வாக்குறுதி

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வென்று ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தால், பிகார் மாநில மக்கள் அனைவருக்கும் இலவச கரோனா தடுப்பூசி போடப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிகார் தேர்தலில் வென்றால் இலவச கரோனா தடுப்பூசி
பிகார் தேர்தலில் வென்றால் இலவச கரோனா தடுப்பூசி

பாட்னா: பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வென்று ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தால், பிகார் மாநில மக்கள் அனைவருக்கும் இலவச கரோனா தடுப்பூசி போடப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிகார் பேரவைத் தேர்தலை முன்னிட்டு பாஜக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் முதல் வாக்குறுதியாக கரோனா தடுப்பூசி இடம்பெற்றுள்ளது.

பிகார் பேரவைத் தேர்தலுக்கான பாஜகவின் வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டார்.

பிகாரிலுள்ள 243 பேரவைத் தொகுதிகளுக்கு அக்டோபர் 28-ம் தேதி 3 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது. நவம்பர் 10-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின்றன.

இந்தத் தேர்தலுக்கான வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை நிர்மலா சீதாராமன் இன்று பாட்னாவில் வெளியிட்டார். 

அப்போது அவர் கூறுகையில், கரோனா தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டு, அதிக அளவில் உற்பத்தி செய்யப்படும்போது, பிகார் மக்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும். பாஜக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் நாங்கள் இதைத்தான் முதல் வாக்குறுதியாக வழங்கியுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
 

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகுதான் பிகார் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி மேம்பட்டது. அதற்கு பாஜக அரசின் நிர்வாகத் திறமையே காரணம்.

அரசியல் ரீதியாக அதிக உணர்வு கொண்ட மக்கள் இருக்கும் மாநிலங்களில் ஒன்றாக பிகார் உள்ளது. இங்கு அனைத்து மக்களும் நன்கு அறிந்தவர்களாக உள்ளனர். அரசியல் கட்சிகள் அளிக்கும் வாக்குறுதிகளை அவர்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள் மற்றும் புரிந்துகொள்கிறார்கள். எங்கள் தேர்தல் வாக்குறுதி குறித்து யார் கேள்வி எழுப்பினாலும், நாங்கள் நம்பிக்கையோடு, அந்த வாக்குறுதிகளை முழுக்க நிறைவேற்றுவோம் என்று எங்களால் உறுதி அளிக்க முடியும் என்றும் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
 

ஐக்கிய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்துள்ள பாஜக 243 தொகுதிகளில் 121 இடங்களில் போட்டியிடுகிறது. தனக்கு ஒதுக்கப்பட்ட 121 இடங்களில் விகாஸ்ஷீல் இன்சான் கட்சிக்கு 11 இடங்களை ஒதுக்கியது. இதன்மூலம், பாஜக 110 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

ஐக்கிய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்துள்ள பாஜக 243 தொகுதிகளில் 121 இடங்களில் போட்டியிடுகிறது. தனக்கு ஒதுக்கப்பட்ட 121 இடங்களில் விகாஸ்ஷீல் இன்சான் கட்சிக்கு 11 இடங்களை ஒதுக்கியது. இதன்மூலம், பாஜக 110 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com