தில்லியில் மழை காரணமாக இன்று நடைபெறவிருந்த விவசாயிகளின் டிராக்டர் பேரணி நாளை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி எல்லைகளில் விவசாயிகளின் போராட்டம் 40 நாள்களைக் கடந்து கடும் பனிமூட்டம் நிலவி வரும் சூழ்நிலையிலும் போராட்டம் தொடர்ந்து வருகிறது.
குறைந்தபட்ச ஆதரவு விலையை அரசு உறுதி செய்ய வேண்டும், வேளாண் சட்டங்களை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாக இருக்கிறது.
கடந்த நவம்பர் 26 ஆம் தேதி முதல் தில்லி எல்லைகளில் பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுக்கும் அவர்கள் இன்று டிராக்டர் பேரணி நடத்தத் திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில் தில்லியில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் இன்று நடத்துவதாக அறிவித்திருந்த டிராக்டர் பேரணி ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக நாளை(வியாழக்கிழமை) டிராக்டர் பேரணி நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர். மேலும், குடியரசு தினத்தன்று நடைபெறவுள்ள மிகப்பெரும் டிராக்டர் பேரணிக்கு இது முன்னோட்டமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய மின் தடை: சங்ககிரி

சிவகிரி பகுதியில் இன்று மின் நிறுத்தம்

16.5.1976: சினிமாவில் வன்முறை, ஆபாச காட்சிகள் தடை: மந்திரி கண்டிப்பு

4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

