புதுச்சேரி தற்காலிக பேரவைத் தலைவர் அன்பழகன் முதல்வர் விஜய்யுடன் பிஎம்டபிள்யூ, யமஹா நிறுவன தலைவர்கள் சந்திப்பு!பெட்ரோல், டீசல் விற்பனை வரியை தவெக அரசு குறைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!4 ஆண்டுகளுக்கு பின் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை! என்னவெல்லாம் விலை உயரும்?இபிஎஸ் அழைத்தால் பேசத் தயார்! எஸ்.பி. வேலுமணிபினராயி விஜயனுடன் கேரள முதல்வர் (தேர்வு) வி.டி. சதீசன் சந்திப்பு!
/

தமிழகம் உள்பட 4 மாநிலங்களுக்கு தேர்தல் மேலிடப் பார்வையாளர்களை நியமித்தது காங்கிரஸ்

இந்த ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு உள்பட 4 மாநிலங்கள், புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு தேர்தலுக்கான மேலிடப் பார்வையாளர்களை காங்கிரஸ் கட்சி நியமித்துள்ளது.

Updated On :7 ஜனவரி 2021, 4:37 am IST

புது தில்லி: இந்த ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு உள்பட 4 மாநிலங்கள், புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு தேர்தலுக்கான மேலிடப் பார்வையாளர்களை காங்கிரஸ் கட்சி நியமித்துள்ளது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் ஒப்புதலுடன் கட்சியின் பொதுச் செயலாளரும், மக்களவை எம்.பி.யுமான கே.சி.வேணுகோபால் இது தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
தேர்தல் நடைபெறவுள்ள நான்கு மாநிலங்கள் தேர்தல் தொடர்பான பணிகளை நிர்வகிப்பது மற்றும் ஒருங்கிணைப்பதற்காக மேலிடப் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 
தமிழகம், புதுச்சேரி மேலிடப் பார்வையாளர்களாக முன்னாள் மத்திய அமைச்சர்கள் வீரப்ப மொய்லி, எம்.எம்.பள்ளம் ராஜு மற்றும் மகாராஷ்டிர மாநில அமைச்சர் நிதின் ரெளத் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், கோவா முன்னாள் முதல்வர் லுசினோ ஃபெலிரோ, கர்நாடக முன்னாள் துணை முதல்வர் ஜி.பரமேஷ்வரா ஆகியோருக்கு கேரள மாநில மேலிடப் பார்வையாளர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்துக்கு முன்னாள் எம்.பி. ஹரிபிரசாத், ஜார்க்கண்ட் மாநில எம்எல்ஏ ஆலம்கீர் ஆலம், பஞ்சாப் கல்வியமைச்சர் விஜய் இந்தர் சிங்லா ஆகியோரும், அஸ்ஸாம் மாநிலத்துக்கு சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பகேல், காங்கிரஸ் பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக், பிகார் எம்எல்ஏ ஷகீல் அகமது கான் ஆகியோர் மேலிடப் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.