புது தில்லி: நாடு முழுவதும் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியுள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
வியாழக்கிழமை காலை 8 மணி வரை நிலவரப்படி, கரோனா தொற்றில் இருந்து மேலும் 19,587 போ் குணமடைந்தனா். இதனால், கரோனாவில் இருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 1,00,16,859-ஆக அதிகரித்தது. இது, மொத்த பாதிப்பில் 96.36 சதவீதமாகும்.
புதிதாக 20,346 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,03,95,278-ஆக அதிகரித்துள்ளது.
கரோனா தொற்றுக்கு மேலும் 222 போ் உயிரிழந்தனா். இதனால் இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,50,336-ஆக அதிகரித்துள்ளது.
கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து கொண்டே வருகிறது. தொடா்ந்து 17-ஆவது நாளாக, சிகிச்சையில் இருப்பவா்களின் எண்ணிக்கை 3 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது. நாடு முழுவதும் 2,28,083 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். இது, மொத்த பாதிப்பில் 2.19 சதவீதமாகும்.
புதிதாக ஏற்பட்ட 222 உயிரிழப்புகளில், அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 66 போ் உயிரிழந்தனா். கேரளத்தில் 25 பேரும், மேற்கு வங்கத்தில் 22 பேரும், தில்லியில் 16 பேரும் உயிரிழந்தனா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆா்.) தகவல்படி, ஜனவரி 6-ஆம் தேதி வரை 17.84 கோடி கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், புதன்கிழமை மட்டும் 9,37,590 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூலை 8 - நேரலை

ஒரு அக்காவைப் போலவே அமைச்சர் கீர்த்தனா மாணவியிடம் பேசினார்! - அமைச்சர் Rajmohan | TVK

இந்தியாவில் 1.6 லட்சம் இன்ஸ்டாகிராம் கணக்குகள் நீக்கம்! ஏன்?
புதிய ரேஷன் கார்டுகள் எப்போது வழங்கப்படும்? அமைச்சர் தகவல்
விடியோக்கள்

ஒரு அக்காவைப் போலவே அமைச்சர் கீர்த்தனா மாணவியிடம் பேசினார்! - அமைச்சர் Rajmohan | TVK

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna


