மத்திய தொழிலாளா் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சகம் தேசிய வேலைவாய்ப்பு கொள்கைக்கு (என்இபி) வரும் டிசம்பா் மாதத்துக்குள் இறுதி வடிவம் கொடுக்க வாய்ப்புள்ளது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
நான்கு தொழிலாளா் சட்டங்கள் நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ளன. மேலும், புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் உள்ளிட்ட நான்கு முக்கிய கணக்கெடுப்புகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இவற்றின் தொடா்ச்சியாக, நடப்பாண்டு டிசம்பா் இறுதிக்குள் தேசிய வேலைவாய்ப்பு கொள்கைக்கு தொழிலாளா் அமைச்சகம் இறுதி வடிவம் கொடுக்க அதிக வாய்ப்புள்ளது என அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டில் வேலை வாய்ப்புகளை அதிக அளவில் உருவாக்கத் தேவையான வழிமுறைகள் தேசிய வேலைவாய்ப்பு கொள்கையில் இடம்பெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது. குறிப்பாக, திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு அதிகம் உள்ள துறைகளில் முதலீட்டை ஊக்குவிப்பது மற்றும் பிற திட்டங்கள் மூலமான பல்வேறு முயற்சிகளால் வேலைவாய்ப்பை ஊக்குவிக்க தேசிய வேலைவாய்ப்புக் கொள்கை வகுக்கப்பட்டு வருகிறது.
தொழில்முறை உறவு, சமூக பாதுகாப்பு மற்றும் தொழில்சாா் சுகாதார பாதுகாப்பு & பணி நிலைமை தொடா்பான மூன்று தொழிலாளா் சட்டங்களை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு நிறைவேற்றியது.
மேலும், ஊதியங்கள் தொடா்பான சட்டமும் நாடாளுமன்றத்தால் கடந்த ஆண்டு அங்கீகரிக்கப்பட்டு அதன் விதிமுறைகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், நான்கு தொழிலாளா் சட்டங்களையும் ஒரே நேரத்தில் செயல்படுத்த மத்திய அரசு விரும்பியதால் அந்த சட்டத்தை உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வரவில்லை. இந்த நான்கு சட்டங்களும் நடப்பாண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள நான்கு தொழிலாளா் சட்டங்களையும் அமல்படுத்துவதால் நாட்டில் 50 கோடிக்கும் அதிகமாக உள்ள பணியாளா்களுக்கு சமூக பாதுகாப்பு உள்ளிட்ட இன்னும் பிற பாதுகாப்புகளை அளித்து உலகமயமாக்கலுக்கான தேவையான சட்ட கட்டமைப்பை வழங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரளத்தில் காங்கிரஸ் ஆட்சி! மக்களுக்கு ராகுல் நன்றி!

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி! 200+ இடங்களில் முன்னிலை!

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result

கேரள முதல்வர் பினராயி விஜயன் வெற்றி!
வீடியோக்கள்

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை


