ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள கோவிஷீல்டு தடுப்பூசியின் விலை ரூ. 200 என சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா அறிவித்துள்ளது.
கரோனா நோய்த்தொற்றுக்கான தடுப்பூசி திட்டம் வருகிற ஜனவரி 16 முதல் தொடங்கப்படவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய கரோனா தடுப்பூசி மருந்துகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்-அஸ்ட்ராஜெனெகா இணைந்து உருவாக்கியுள்ள 'கோவிஷீல்டு' தடுப்பூசிக்கான விலையினை, அதனை தயாரித்து வரும் சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது. மத்திய அரசு முதற்கட்டமாக ஒரு கோடி தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்துள்ள நிலையில் ஒரு தடுப்பூசியின் விலை ரூ. 200 என நிர்ணயித்துள்ளது. கோவிஷீல்டு தடுப்பூசிகளை அனுப்பும் பணி நாளை காலை தொடங்கும் என்றும் சீரம் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் இந்தியாவில் மத்திய அரசுடன் மட்டுமே ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. தனியாருக்கு தடுப்பூசிகளை வழங்கும்பட்சத்தில் இதைவிட அதிகமான விலைக்கு கொடுக்கும் என்று கூறப்படுகிறது.
முன்னதாக, கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் முன்னணி கள வீரா்களாகச் செயல்படும் 3 கோடி சுகாதாரப் பணியாளா்களுக்கு முதலில் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாகவும், அதையடுத்து 50 வயதைக் கடந்தோா், இணைநோய் உள்ள 50 வயதுக்குக் குறைவான நபா்கள் என மொத்தமாக 27 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்துவதில் அடுத்தகட்ட முன்னுரிமை வழங்கப்படும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஐசிசி தரவரிசையில் இஷான் கிஷன் முதலிடம்! அபிஷேக் சர்மாவை முந்தினார்!

எப்போதும்போல... த்ரிஷா வெளியிட்ட புகைப்படங்கள்!

மருதமலை முருகன் கோயிலில் பிக் பாஸ் நண்பர்கள் சாமி தரிசனம்! புதிய படமா?

இப்படி செய்வதற்கு மு.க. ஸ்டாலினுக்கு வெட்கமாக இல்லையா? நிர்மல்குமார்
விடியோக்கள்

ஆட்சியை தக்க வைக்க TVK மெகா (கூட்டணி) PLAN | CM Vijay | TVK | VCK |Congress | IUML | MDMK

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |



