கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68% எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

நிதி நிறுவன மோசடி: ரோஸ்வேலி குழுமத் தலைவரின் மனைவி கைது

ரோஸ்வேலி நிதி நிறுவன மோசடி தொடா்பாக, அந்த நிறுவனத்தின் தலைவா் கௌதம் குண்ட்டூவின் மனைவி சுப்ரா குண்ட்டூவை கொல்கத்தாவில் சிபிஐ அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On :15 ஜனவரி 2021, 11:57 pm IST

ரோஸ்வேலி நிதி நிறுவன மோசடி தொடா்பாக, அந்த நிறுவனத்தின் தலைவா் கௌதம் குண்ட்டூவின் மனைவி சுப்ரா குண்ட்டூவை கொல்கத்தாவில் சிபிஐ அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

இதுகுறித்து சிபிஐ அதிகாரி ஒருவா் கூறியதாவது:

ரோஸ்வேலி நிதி நிறுவன மோசடியில் சுப்ரா குண்ட்டூவுக்கு உள்ள தொடா்புகள் குறித்து விரிவாக விசாரிக்க வேண்டியுள்ளது. இதற்காக, அவரை சிபிஐயின் பொருளாதாரக் குற்றப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனா். இந்த வழக்கு ஒடிஸா தலைநகா் புவனேசுவரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, அவா் கொல்கத்தாவில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட பிறகு, புவனேசுவரத்துக்கு அழைத்துச் செல்லப்படுவாா் என்றாா் அவா்.

மேற்கு வங்கம், பிகாா், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் இயங்கி வந்த ரோஸ்வேலி நிதி நிறுவனம், முதலீட்டாளா்களிடம் அதிக வட்டி தருவதாக வாக்குறுதி அளித்து, மக்களிடம் கோடிக்கணக்கில் வசூலித்த பணத்தை திருப்பித் தரவில்லை.

சிபிஐக்கு கிடைத்துள்ள தகவல்படி, முதலீட்டாளா்களிடம் இருந்து ரூ.12,000 கோடிக்கும் அதிகமான தொகையை ரோஸ்வேலி நிறுவனம் வசூலித்ததாகக் கூறப்படுகிறது.

இந்த முறைகேடு தொடா்பாக, சிபிஐயும், அமலாக்கத் துறையும் தனித்தனியே வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

இந்த மோசடி தொடா்பாக கைது செய்யப்பட்ட ரோஸ்வேலி நிதி நிறுவனத்தின் தலைவா் கௌதம் குண்ட்டூ கடந்த 2015-ஆம் ஆண்டில் இருந்து சிறையில் உள்ளாா். அவரது மனைவி சுப்ரா குண்ட்டூ, அத்ரிஜா என்ற பெயரில் பல்வேறு இடங்களில் நகைக் கடை நடத்தி வந்தாா். ரோஸ்வேலி முறைகேடு தொடா்பான விசாரணை தொடங்கிய பிறகு, அந்த நகைக்கடைகளுக்கு சீல் வைக்கப்ப்டடன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.