புது தில்லி: இந்தியாவில் கரோனா நோய் தொற்றின் பாதிப்பு தொடர்ந்து குறைந்து சிகிச்சையில் உள்ள கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தற்போது 2.13 இலட்சமாக (2,13,027) உள்ளது. இது மொத்த பாதிப்பில் வெறும் 2.03 சதவீதமாகும்.
கடந்த சில நாட்களாக இந்தியாவில் கரோனா தொற்றின் புதிய பாதிப்புகள் தொடர்ந்து 20,000-க்கும் குறைவாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 15,590 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 15,975 பேர் குணமடைந்துள்ளனர்.
நாட்டில் இதுவரை மொத்தம் 1,01,62,738 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைந்தோர் மற்றும் சிகிச்சை பெற்று வருவோர் ஆகியோருக்கான இடைவெளி தொடர்ந்து அதிகரித்து 99 இலட்சத்தைக் கடந்துள்ளது (99,49,711). குணமடைந்தவர்களின் வீதம் 96.52 சதவீதமாக உயர்ந்துள்ளது.
புதிதாக குணமடைந்தவர்களில் 81.15 சதவீதத்தினர் 10 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள். அதிகபட்சமாக கேரளத்தில் 4,337 பேர் ஒரே நாளில் குணமடைந்துள்ளனர்.
77.56 சதவீத புதிய தொற்றுக்கள் 7 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் பதிவாகியுள்ளது. கேரளத்தில் 5,490 பேர் புதிதாக தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 191 பேர் உயிரிழந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இளைஞரின் தலையில் சிக்கிய 10 கிலோ பால் கேன்! 2 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு அகற்றம்

பிளேயிங் லெவன் மாற்றத்தினால் தடுமாறும் சிஎஸ்கே..! மிகக் குறைந்த பவர்பிளே ரன்கள்!

தமிழகத்திற்கு வழங்கப்படும் மின்சாரத்தை நிறுத்தக் கூடாது: மத்திய அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்

கற்றுக்கொள்ள சிறந்த தளம் மனதின் குரல் நிகழ்ச்சி! பாஜக தலைவர் பேச்சு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


