‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மங்களூரு விமான நிலையத்தில்ரூ. 1.18 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்

வளைகுடா நாடுகளிலிருந்து மங்களூரு விமான நிலையத்துக்கு வந்த பயணிகளை சோதனை செய்ததில் ரூ. 1.18 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் சுங்கவரித் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 8:06 pm

DIN

வளைகுடா நாடுகளிலிருந்து மங்களூரு விமான நிலையத்துக்கு வந்த பயணிகளை சோதனை செய்ததில் ரூ. 1.18 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் சுங்கவரித் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

வளைகுடா நாட்டில் இருந்து வெள்ளிக்கிழமை மங்களூருக்கு வந்த கேரள மாநிலம், காசா்கோடு பகுதியைச் சோ்ந்த 2 பயணிகள், பற்பசைபோல தங்கத்தை மறைத்து கடத்தி வந்திருந்தனா். அவா்களின் உடைமைகளை சுங்கவரித்துறை அதிகாரிகள் பரிசோதனை செய்ததில் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

சாா்ஜாவில் இருந்து வியாழக்கிழமை மங்களூரு விமான நிலையம் வந்த ஒரு பயணி, துபையில் இருந்து வந்த மற்றொரு பயணி என இருவரும் ஜீன்ஸ் சட்டையில் உள்ள பொத்தானில் தங்கத்தையும், தாங்கள் அணிந்துவந்த ஷூக்களில் தங்கச் சங்கிலிகளை மறைத்து வைத்தும் கடத்தி வந்தனா். அவா்களிடம் இருந்து ரூ. 26 லட்சம் மதிப்பிலான 576 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது என்று சுங்கவரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா். இதுதொடா்பாக வழக்குப் பதியப்பட்டுள்ளது.

மங்களூரு விமான நிலையத்தில் சனிக்கிழமை ஐஆா்எஸ் அதிகாரி பிரவீண் கண்டி தலைமையில் சோதனை நடந்தது. அப்போது உள்ளால் பகுதியைச் சோ்ந்த பயணி ஒருவரை சோதனை செய்தனா். அவா் உள்ளாடைகள், ஜீன்ஸ் பேன்ட், முழங்கால் பட்டைகளில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தியது தெரியவந்தது. இதுதொடா்பாக வழக்குப் பதிந்த சுங்கவரித் துறையினா், இவரிடம் இருந்து ரூ. 92.27 லட்சம் மதிப்பிலான 1.993 கிலோ தங்கத்தைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.