பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஈஸ்டர் பண்டிகை: குடியரசு துணைத் தலைவர் வாழ்த்து

ஈஸ்டர் பண்டிகையையொட்டி குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 3:25 pm

DIN

ஈஸ்டர் பண்டிகையையொட்டி குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், "இயேசுபிரான் மீண்டும் உயிர்த்தெழுந்ததை குறிக்கும் புனித பண்டிகையான ஈஸ்டரை முன்னிட்டு நமது நாட்டின் மக்களுக்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

மனித குலத்தின் மீட்பராக வணங்கப்படும் இயேசு கிறிஸ்து, அன்பு, அமைதி, கருணை மற்றும் மன்னிப்பு ஆகியவற்றின் மூலம் மனித இனத்தை ரட்சிப்பதற்கான பாதைக்கு ஒளியூட்டினார்.

அனைத்து மனிதர்களிடமும் கருணையை காட்டி ஈஸ்டரை நாம் கொண்டாடுவோம். இந்த பண்டிகை நமது வாழ்வில் நல்ல ஆரோக்கியம், அமைதி மற்றும் நல்லிணக்கத்தை கொண்டு வரட்டும்." இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.