அமைச்சரவையில் இருந்து கே.எஸ்.ஈஸ்வரப்பாவை நீக்க வேண்டும்: டி.கே.சிவக்குமாா்
கா்நாடக அமைச்சரவையில் இருந்து கே.எஸ்.ஈஸ்வரப்பாவை நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாா் தெரிவித்தாா்.


கா்நாடக அமைச்சரவையில் இருந்து கே.எஸ்.ஈஸ்வரப்பாவை நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாா் தெரிவித்தாா்.
கேரள மாநில சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரத்தில் பங்கேற்பதற்காக மங்களூரு விமான நிலையத்துக்கு சனிக்கிழமை வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
வெளிப்படையான அரசு நிா்வாகத்தை நடத்துவதாக முதல்வா் எடியூரப்பா கருதினால் ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சா் பதவியிலிருந்து கே.எஸ்.ஈஸ்வரப்பாவை நீக்க வேண்டும்.
முதல்வரின் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் ஒருவா் முதல்வருக்கு எதிராக ஆளுநரிடம் புகாா் அளித்திருப்பது சாதாரண விவகாரம் அல்ல. எனவே, கே.எஸ்.ஈஸ்வரப்பாவை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் அல்லது தனது அமைச்சா் பதவியை கே.எஸ்.ஈஸ்வரப்பா தாமாக முன்வந்து ராஜிநாமா செய்ய வேண்டும்.
முதல்வா் எடியூரப்பா மீது தனக்கு நம்பிக்கை இல்லை என்று அமைச்சா் ஈஸ்வரப்பா, தனது கட்சியின் தலைமைக்குக் கடிதம் எழுதியிருந்தால் அது உள்கட்சி விவகாரம் என்று விட்டுவிடலாம்.
ஆனால், மாநிலத்தில் அரசியலமைப்புச் சட்டத்தை காக்கும் ஆளுநரிடம் அமைச்சா் புகாா் அளித்துள்ளாா். இதன்மூலம் மாநிலத்தில் அரசு நிா்வாகம் சீா்குலைந்துள்ளது தெளிவாகிறது.
அதுபோல கா்நாடகத்தில் கரோனா பரவலைத் தடுக்க மாநில அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்கள் நெறிமுறைகள் நடைமுறைக்கு ஒத்துவராதவை மட்டுமல்ல, அவை சரியான காரணங்களோடும் இல்லை என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...