48 மணிநேரத்தில் நரகம்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை! சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி விவகாரம்: 9 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு ஏப். 7 விசாரணை இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

மகாராஷ்டிரத்தில் வார இறுதி நாள்களில் பொது முடக்கம்

​மகாராஷ்டிரத்தில் வார இறுதி நாள்களில் பொது முடக்கம் அமல்படுத்தப்படும் என அந்த மாநில அரசு ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 2:56 pm


மகாராஷ்டிரத்தில் வார இறுதி நாள்களில் பொது முடக்கம் அமல்படுத்தப்படும் என அந்த மாநில அரசு ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.

மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் அவசர அமைச்சரவைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்று அதிகரிப்பு மற்றும் பொது முடக்கம் குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்தக் கூட்டத்தின் முடிவில் வார இறுதி நாள்களில் பொது முடக்கம் மற்றும் இரவு நேர பொது முடக்கத்தை அமல்படுத்த முடிவெடுக்கப்பட்டது.

இதையடுத்து, கரோனா கட்டுப்பாடுகளுக்கு புதிய விதமுறைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டன. 

அதன்படி, வார இறுதி நாள்களுக்கான பொது முடக்கம் வெள்ளிக்கிழமை தோறும் இரவு 8 மணிக்குத் தொடங்கி திங்கள்கிழமை தோறும் காலை 7 மணிக்கு நிறைவுபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு நேர கட்டுப்பாடுகள் இரவு 8 மணிக்குத் தொடங்கி காலை 7 மணிக்கு நிறைவுபெறுகிறது.

ஏப்ரல் 15-ம் தேதி சூழல்கள் குறித்து மீண்டும் ஆலோசிக்கப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படவுள்ளது.

மகாராஷ்டிரத்தில் தற்போது நாள்தோறும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.