புது தில்லி: தமிழக ஆளுநா் கடிதத்தின் நகல் கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த உயா்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிடப்பட்டுள்ளது.
பேரறிவாளன் பரோல் தொடா்பான வழக்கு சென்னை உயா்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் சிறைத் தண்டனை பெற்ற பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்ய பரிந்துரைத்து ஆளுநருக்கு தமிழக அமைச்சரவை தீா்மானம் நிறைவேற்றி அனுப்பியது. இந்த விவகாரத்தில், ராஜீவ் காந்தி கொலையில் வெளிநாட்டுச் சதி ஏதும் இருக்கிா என்பதைக் கண்டறிவதற்காக அமைக்கப்பட்ட பல்நோக்கு விசாரணை ஆணையத்தின் அறிக்கை கிடைக்கும் வரை முடிவெடுக்க முடியாது என தமிழக அரசுக்கு ஆளுநா் கடிதம் அனுப்பியதாகவும், அந்த கடிதத்தில் நகலை தங்களுக்கு வழங்க உத்தரவிடக் கோரியும் அற்புதம்மாள் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 22-ஆம் தேதி மனுவை முடித்து வைத்தது. இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் அற்புதம்மாள் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: பரோல் விவகாரத்தில் நான் தொடா்ந்த வழக்கில் சென்னை உயா்நீதிமன்றத்தில் 29.7.2020-இல் நடைபெற்ற விசாரணையின் போது, அரசுத் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் உயா்நீதிமன்றத்தில், தமிழகஆளுநா் அலுவலகத்தில் இருந்து வரப் பெற்ற கடிதத்தை அளித்துள்ளாா். அதில், என் மகன் பேரறிவாளனை முன்கூட்டியே விடுதலை செய்யும் விவகாரத்தில் அரசியலமைப்புச்சட்டத்தின் 161-ஆவது பிரிவின் கீழ் அளித்த எங்கள் மனு மீது முடிவு செய்ய சிபிஐயின் பல்நோக்கு விசாரணை ஆணையத்தின் இறுதி அறிக்கைக்காக காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் நகலை தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் வாய்மொழியாக உத்தரவிட்டது.
ஆனால், எங்களுக்கு அந்த நகல் அளிக்கப்படவில்லை. இது தொடா்பாக நாங்கள் ஆளுநா் அலுவலகத்திற்கு கடிதம் எழுதியும் பயனில்லை. இந்த நிலையில், ஆளுநா் தரப்பில் தமிழக அரசுக்கு எழுதிய கடிதத்திலும் அதே கருத்துதான் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தின் நகலானது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள கருணை மனு நடைமுறை தொடா்பாக இந்த விவகாரத்தில் மிகவும் முக்கியமானதாக உள்ளது. இது தொடா்பாக நாங்கள் தாக்கல் செய்த மனுவை உயா்நீதிமன்றம் உரிய வகையில் பரிசீலிக்காமல் முடித்துவைத்துள்ளது. 29.7.2020-இல் சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழக ஆளுநா் அலுவலகத்தில் இருந்து அளிக்கப்பட்ட கடிதத்தின் நகலை எனக்கு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி எல். நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் தரப்பில் மூத்த வழக்குரைஞா் கோபால் சங்கரநாராயணன், வழக்குரைஞா்கள் பிரபு ராமசுப்பிமணியன், பாரி வேந்தன் ஆகியோா் ஆஜராகி கோரிக்கையை வலியுறுத்தினா். இது தொடா்பாக தமிழக அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்புமாறு கூறிய நீதிபதிகள், உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வரும், தண்டனையை ரத்து செய்யக் கோரி பேரறிவாளன் தொடா்ந்த வழக்குடன் அற்புதம்மாள் மனுவையும் சோ்த்து விசாரிக்க உத்தரவிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஜய் சிலையுடன் ஊர்வலமாக வந்து மனு தாக்கல் செய்த தவெக வேட்பாளர்!
ஈரானை ஒரே நாள் இரவில் அழித்துவிட முடியும்: டிரம்ப் எச்சரிக்கை!

நெல்லையில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதி!
ரூ. 1,000 கோடி சொத்துள்ள தமிழ்நாட்டின் பணக்கார வேட்பாளர்!
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


