கரோனா: காஷ்மீரில் மருத்துவர்கள், துணை மருத்துவர்களுக்கு விடுமுறை ரத்து

காஷ்மீரில் கரோனா தொற்று அதிகரித்துள்ளதையடுத்து, மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவர்களுக்கு வழங்கப்பட்ட விடுமுறைகள் அனைத்தும் ரத்து செய்துள்ளதாக மருத்துவ சுகாதார இயக்குநர் தெரிவித்துள்ளார். 
காஷ்மீரில் மருத்துவர்கள், துணை மருத்துவர்களுக்கு விடுமுறை ரத்து
காஷ்மீரில் மருத்துவர்கள், துணை மருத்துவர்களுக்கு விடுமுறை ரத்து

ஸ்ரீநகர்: காஷ்மீரில் கரோனா தொற்று அதிகரித்துள்ளதையடுத்து, மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவர்களுக்கு வழங்கப்பட்ட விடுமுறைகள் அனைத்தும் ரத்து செய்துள்ளதாக மருத்துவ சுகாதார இயக்குநர் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக காஷ்மீர் இயக்குநர் முஷ்தாக் அஹ்மத் வெளியிட்டுள்ள உத்தரவில், 

காஷ்மீர் பள்ளத்தாக்கில் கரோனா தொற்று அதிகளவில் பரவியுள்ளதால், மருத்துவ கண்காணிப்பாளர்கள், மாவட்ட மற்றும் தடுப்பு மருத்துவ அதிகாரிகள் மற்றும் துணை மருத்துவர்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து விடுமுறைகளும் உடனடியாக ரத்து செய்யப்படுகின்றன. 

மகப்பேறு மற்றும் அவசர விடுப்பில் உள்ள ஊழியர்களைத் தவிர மற்று அனைவரும் உடனடியாக தாங்கள் பணியிடங்களில் தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மேலும், கரோனா பரவுவதைத் தடுக்கும் வகையில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள  அனைத்து பள்ளிகளும் இன்று முதல் மூடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com