வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

புதிய சாதனை: நாட்டில் சுமார் 8 கோடிப் பேருக்கு கரோனா தடுப்பூசி 

கரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் நாடு முழுவதும் 7.9 கோடிக்கும் அதிகமான பயனாளிகளுக்கு தடுப்பூசிகளை செலுத்தி இந்தியா மேலும் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையை படைத்துள்ளது.

News image
புதிய சாதனை: நாட்டில் சுமார் 8 கோடிப் பேருக்கு கரோனா தடுப்பூசி
Updated On :5 ஏப்ரல் 2021, 12:13 pm

DIN


புது தில்லி: கரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் நாடு முழுவதும் 7.9 கோடிக்கும் அதிகமான பயனாளிகளுக்கு தடுப்பூசிகளை செலுத்தி இந்தியா மேலும் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையை படைத்துள்ளது.

இன்று காலை 7 மணி வரை, 12,31,148 முகாம்களில்‌ 7,91,05,163 பயனாளிகளுக்குக் கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 79-வது நாளான நேற்று (ஏப்ரல் 04) ஒரு நாளில் நாடு முழுவதும் 16,38,464 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டது.

இந்தியாவில் அன்றாட புதிய பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கடந்த 24 மணிநேரத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு (1,03,558) புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு, மகாராஷ்டிரம், சத்திஸ்கர், கர்நாடகம்,உத்தரப் பிரதேசம், தில்லி, மத்தியப் பிரதேசம், பஞ்சாப் ஆகிய எட்டு மாநிலங்களில் அன்றாட கரோனா புதிய பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் பதிவான புதிய பாதிப்புகளில் இந்த மாநிலங்களில் மட்டும் 81.90 விழுக்காடு பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 57,074 பேரும், சத்திஸ்கரில் 5,250 பேரும், கர்நாடகத்தில் 4,553 பேரும் புதிதாகத் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

இந்தியாவில் தற்போது 7,41,830 பேர் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது மொத்த பாதிப்பில் 5.89 சதவீதமாகும். நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,16,82,136 ஆக (92.8%) இன்று பதிவாகியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 52,847 பேர் புதிதாகக் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 478 பேர் உயிரிழந்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.