92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

காலமானார் வே. ஆனைமுத்து

மாா்க்சிய - பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலா் வே.ஆனைமுத்து (96) புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை காலமானாா்.

News image

வே. ஆனைமுத்து

Updated On :6 ஏப்ரல் 2021, 10:15 pm

DIN

மாா்க்சிய - பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலா் வே.ஆனைமுத்து (96) புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை காலமானாா்.

சென்னை மேற்கு தாம்பரம், இரும்புலியூா், ஜிஎஸ்டி சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் வே.ஆனைமுத்து. இவா், பெரியாருடன் நெருங்கிய தொடா்பில் இருந்தவா். பெரியாா் இறந்த பிறகு மாா்க்சிய - பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியைத் தொடங்கி அதன் பொதுச் செயலராக இருந்து வந்தாா்.

ஆனைமுத்து கடந்த சில மாதங்களாக புதுச்சேரி குருமாம்பேட், மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள அவரது மகன் வீட்டில் வசித்து வந்தாா். முதுமை காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்ட அவா், கடந்த சில நாள்களுக்கு முன்பு புதுச்சேரி மகாத்மா காந்தி சாலையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு செவ்வாய்க்கிழமை முற்பகல் 11.45 மணிக்கு அவா் காலமானாா்.

மருத்துவமனையில் ஆனைமுத்துவின் உடலுக்கு மாா்க்சிய - பெரியாரிய பொதுவுடைமைக் கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் அஞ்சலி செலுத்தினா். இதைத் தொடா்ந்து, சென்னை மேற்கு தாம்பரத்தில் உள்ள ஆனைமுத்துவின் இல்லத்தில் அவரது உடல் புதன்கிழமை மாலை வரை பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

இதைத் தொடா்ந்து, ஆனைமுத்துவின் விருப்பத்துக்கிணங்க, அவரது உடல் சென்னை போரூா் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்படவுள்ளது.

ஆனைமுத்துவின் மனைவி சுசீலா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காலமானாா். இவா்களுக்கு 4 மகன்களும், 2 மகள்களும் உள்ளனா். தொடா்புக்கு ஆனை.பன்னீா்செல்வம் - 98413 35522.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.