மேற்குவங்கத்தில் அமித் ஷா தலைமையில் பாஜகவினர் பேரணி
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் மேற்குவங்க மாநிலம் சிங்கூரில் புதன்கிழமை பேரணி நடைபெற்றது.


மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் மேற்குவங்க மாநிலம் சிங்கூரில் புதன்கிழமை பேரணி நடைபெற்றது.
மேற்கு வங்கத்தில் மூன்று கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் நான்காம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 10 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து தேர்தல் நடைபெற உள்ள பகுதிகளில் இறுதிக்கட்ட பிரசாரம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் சிங்கூரில் தேர்தல் பேரணி நடைபெற்றது. இன்று மட்டும் பாஜக சார்பில் மேற்குவங்கத்தில் மூன்று பேரணிகள் நடைபெறுகின்றன.
சிங்கூரைத் தொடர்ந்து டோம்ஜூரிலும், ஹவுரா மத்தியாவிலும் இன்று பேரணி நடைபெறவுள்ளது.
294 உறுப்பினர்களைக் கொண்ட மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தல் 8 கட்டங்களாக நடைபெறுகிறது. மூன்று கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் வரும் ஏப்ரல் 10, 17, 22, 26, 29 தேதிகளில் அடுத்தடுத்த கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...