இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

ஹரியாணாவில் பணிமனையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ரயிலில் தீ விபத்து

ஹரியாணாவில் பணிமனையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ரயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. 

News image
Updated On :8 ஏப்ரல் 2021, 12:10 pm

DIN

ஹரியாணாவில் பணிமனையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ரயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
ஹரியாணா மாநிலம், ரோஹ்தக் ரயில் நிலையத்தில் உள்ள பணிமனையில் நிறுத்தப்பட்டிருந்த ரயிலில் இன்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது. 
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வாகனங்களில் விரைந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். 
இந்த சம்பவத்தில் ரயிலின் 4 பெட்டிகள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. 
தீவிபத்திற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. மேலும் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.