திமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி திருப்பூர் மேயர் ராஜிநாமா சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்
/

மகாராஷ்டிரத்தில் ஒரேநாளில் 56,286 பேருக்கு கரோனா 

மகாராஷ்டிரத்தில் இன்று ஒரேநாளில் 56,286 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

News image
Updated On :8 ஏப்ரல் 2021, 3:45 pm

மகாராஷ்டிரத்தில் இன்று ஒரேநாளில் 56,286 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து அம்மாநில சுகதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், மாநிலத்தில் புதிதாக இன்று ஒரேநாளில் அதிகபட்சமாக 56,286 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 32,29,547-ஆக உயா்ந்துள்ளது.

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 36,130 போ் இன்று வீடு திரும்பியுள்ளனா். இதுவரை மாநிலத்தில் 26,49,757 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 5,21,317 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மாநில அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தவா்களில் 376 போ் இன்று பலியாகியுள்ளனா். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 57,028ஆக உயர்ந்துள்ளது. 27,02,613 பேர் வீட்டுக்கண்காணிப்பில் உள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.