அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி திருப்பூர் மேயர் ராஜிநாமா சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

சூர்யகுமார் யாதவ் அரைசதம்; தில்லி கேபிடல்ஸுக்கு 163 ரன்கள் இலக்கு!

ஐபிஎல் தொடரில் தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் 6 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் எடுத்துள்ளது.

News image

பந்தை சிக்ஸருக்கு விளாசும் சூர்யகுமார் யாதவ் - படம் | ஐபிஎல் (எக்ஸ்)

Updated On :4 ஏப்ரல் 2026, 12:03 pm

ஐபிஎல் தொடரில் தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் 6 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் எடுத்துள்ளது.

ஐபிஎல் தொடரில் தில்லி அருண் ஜெட்லி திடலில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் தில்லி கேபிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தில்லி கேபிடல்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் விளையாடியது.

சூர்யகுமார் யாதவ் அரைசதம் விளாசல்!

முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் எடுத்துள்ளது.

முதல் போட்டியில் அதிரடியாக விளையாடிய தொடக்க ஆட்டக்காரர் ரியான் ரிக்கல்டான் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, திலக் வர்மா 0 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அணியில் அதிகபட்சமாக கேப்டன் சூர்யகுமார் யாதவ் 36 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். ரோஹித் சர்மா 35 ரன்களும், நமன் திர் 28 ரன்களும் எடுத்தனர். மிட்செல் சாண்ட்னர் 18 ரன்கள் எடுத்தார்.

தில்லி கேபிடல்ஸ் தரப்பில் முகேஷ் குமார் இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். லுங்கி இங்கிடி, அக்‌ஷர் படேல், விப்ராஜ் நிகம் மற்றும் நடராஜன் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தில்லி கேபிடல்ஸ் அணி விளையாடி வருகிறது.

Summary

In the IPL match against the Delhi Capitals, the Mumbai Indians, batting first, scored 162 runs for the loss of 6 wickets.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.