மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் மோசமான கேப்டன்சியை வெளிப்படுத்தியதாக அஜிங்க்யா ரஹானேவை இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் விமர்சித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே திடலில் நேற்று (மார்ச் 29) நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை வீழ்த்தியது.
இந்தப் போட்டியில் 221 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா மற்றும் ரியான் ரிக்கல்டான் சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர். இந்த இணை முதல் விக்கெட்டுக்கு 148 ரன்கள் சேர்த்தது. ரோஹித் சர்மா 38 பந்துகளில் 78 ரன்களும், ரிக்கல்டான் 43 பந்துகளில் 81 ரன்களும் எடுத்தனர்.
ஹர்பஜன் சிங் (கோப்புப் படம்)
இந்த நிலையில், பவர்பிளேவில் சுனில் நரைனைப் பயன்படுத்தி ரோஹித் சர்மாவின் விக்கெட்டினை வீழ்த்த தவறிவிட்டதாகவும், ரஹானேவின் கேப்டன்சி சிறப்பாக இல்லை எனவும் ஹர்பஜன் சிங் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ரோஹித் சர்மா பேட்டிங்கில் இருக்கும்போது, குறைந்த ஒன்று அல்லது இரண்டு ஓவர்களாவது சுனில் நரைனுக்கு வழங்கி அவரது விக்கெட்டினை வீழ்த்த முயற்சித்திருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் மும்பை இந்தியன்ஸ் அணி விக்கெட்டுகளை இழந்து அழுத்தத்தில் இருந்திருக்கும். ஆனால், சுனில் நரைன் முழுவதுமாக நான்கு ஓவர்களை வீசவில்லை. இந்தப் போட்டியில் ரஹானேவின் கேப்டன்சி சிறப்பாக இல்லை. ரோஹித் சர்மா மற்றும் ரியான் ரிக்கல்டான் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர் என்றார்.
நேற்றைய ஆட்டத்தில் சுனில் நரைன் 3 ஓவர்கள் வீசி 30 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
Summary
Former Indian cricketer Harbhajan Singh has criticized Ajinkya Rahane for displaying poor captaincy during the match against the Mumbai Indians.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பாகிஸ்தான் அத்துமீறினால் கற்பனைக்கு அப்பாற்பட்ட பதிலடி கொடுக்கப்படும்: ராஜ்நாத் சிங்
மத்திய ரயில்வே இணையமைச்சர் ரவ்நீத் சிங் பிட்டு ‘திடீர்’ ராஜிநாமா!

உங்கள் நல்வாழ்வே ஒளிமயமான இந்தியாவின் அடித்தளம்: யுவராஜ் சிங்

அனைத்துமே ஞாபகத்தில் வைத்துக்கொள்ளப்படும்..! காவல்துறையின் அராஜகத்துக்கு பாலிவுட் பாடகர் கண்டனம்!
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0




