
டி20 லீக் தொடரில் 173 ரன்கள் குவித்த மும்பை இந்தியன்ஸ் வீரர்!
ஷேர்-இ-பஞ்சாப் லீக் டி20 தொடரில் மும்பை இந்தியன்ஸ் வீரர் நமன் திர் 173 ரன்கள் எடுத்து அசத்தியுள்ளார்.

நமன் திர் - படம் | ஐபிஎல் (எக்ஸ்)
ஷேர்-இ-பஞ்சாப் லீக் டி20 தொடரில் மும்பை இந்தியன்ஸ் வீரர் நமன் திர் 173 ரன்கள் எடுத்து அசத்தியுள்ளார்.
ஷேர்-இ-பஞ்சாப் லீக் டி20 தொடரின் இன்றையப் போட்டியில் அமிர்தசரஸ் சூர்மாஸ் மற்றும் மொஹாலி கிங்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் அமிர்தசரஸ் சூர்மாஸ் அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய அமிர்தசரஸ் சூர்மாஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 279 ரன்கள் எடுக்க, மொஹாலி கிங்ஸ் அணி 212 ரன்கள் மட்டுமே எடுத்து 67 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அமிர்தசரஸ் சூர்மாஸ் அணியின் கேப்டன் நமன் திர், அதிரடியாக 37 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். அதிரடியாக விளையாடிய அவர் 64 பந்துகளில் 173 ரன்கள் எடுத்தார். அதில் 16 பவுண்டரிகள் மற்றும் 12 சிக்ஸர்கள் அடங்கும்.
ஐபிஎல் தொடரில் ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியில் நமன் திர் விளையாடி வருகிறார். அவர் கடந்த 2024 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அறிமுகமாகி 7 போட்டிகளில் விளையாடினார்.
அடுத்தடுத்த சீசன்களிலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவே நமன் திர் விளையாடினார். இதுவரை 37 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 710 ரன்கள் குவித்துள்ளார். அதில் 3 அரைசதங்கள் அடங்கும்.
Summary
Mumbai Indians player Naman Dhir has impressed by scoring 173 runs in the Sher-e-Punjab T20 League.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





