உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

ஜிஎஸ்எல்: 85 ரன்கள் இலக்கைக் கட்டுப்படுத்தி, த்ரில் வெற்றியுடன் கோப்பையை தக்கவைத்த கயானா!

குளோபல் சூப்பர் லீக் டி20 இறுதிப் போட்டியில் த்ரில் வெற்றி பெற்ற கயானா அமேசான் வாரியர்ஸ் அணி குறித்து...

The Amazon Warriors team that won the Global Super League T20 Cup.

குளோபல் சூப்பர் லீக் டி20 கோப்பை வென்ற அமேசான் வாரியர்ஸ் அணியினர். - படம்: எக்ஸ் / ஜிஎஸ்எல்டி20

Published On :

குளோபல் சூப்பர் லீக் இறுதிப் போட்டியில் 85 ரன்களை இலக்காக நிர்ணயித்தும், கயானா அமேசான் வாரியர்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியுடன் இரண்டாவது முறையாக இந்த குளோபல் சூப்பர் லீக் கோப்பையை வென்று அசத்தியுள்ளது. கடந்த சீசனில் இந்த அணிதான் கோப்பை வென்றது குறிப்பிடத்தக்கது.

கிரிக்கெட் வெஸ்ட் இண்டீஸ் நடத்தும் குளோபல் சூப்பர் லீக் போட்டிகள் கடந்த 2024 முதல் நடைபெறுகின்றன. இதனை கிளைவ் லாய்டு தலைமையேற்று நடத்துகிறார்.

பல நாடுகளில் டி20 லீக்கில் வெற்றிப் பெற்ற அணிகள் இணைந்து சாம்பியன்ஸ் லீக் போல நடத்தப்படுகிறது. இதில் ஐந்து அணிகள் பங்கேற்கின்றன.

இந்த சீசனின் இறுதிப் போட்டியில் கரீபியன் சாம்பியன்ஷிப்பான கயானா அமேசான் வாரியர்ஸ் மற்றும் எம்எல்சி சாம்பியனான சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கயானா பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த கயானா அமேசான் வாரியர்ஸ் 18.5 ஓவர்களில் 85 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக மேத்திவ் போர்டு 28, பிரிடோரியஸ் 17, இம்ரான் தாஹிர் 11 ரன்கள் எடுத்தார்கள். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தார்கள்.

சான்பிரான்சிஸ்கோ அணி பந்துவீச்சில் பீட்டர் சிடில், அனிருத் இம்மானுவேல் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தார்கள். அடுத்து பேட்டிங் செய்த இந்த அணி 18.3 ஓவர்களில் 79 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்த அணியில் அதிகபட்சமாக ஆலிவர் பீக்கி 31, பீட்டர் சிடில் 13 ரன்கள் எடுத்தார்கள். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தார்கள்.

கயானா அணி சார்பில் பந்துவீச்சில் பிரிடோரியஸ், முகமது நபி தலா 3 விக்கெட்டுகள், இம்ரான் தாஹிர் 2 விக்கெட்டுகளையும் எடுத்து அசத்தினார்கள். ஆட்ட நாயகனாக டிவைன் பிரிடோரியஸ், தொடர் நாயகனாக முகமது நபி தேர்வானார்கள்.

Summary

Global Super League Guyana defends the trophy with a thrilling victory after restricting the target to 85 runs!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.