பொங்கல் திருநாளுக்கு வழங்கப்படும் வேட்டியின் அளவு 4 முழமாகக் குறைப்பு: அமைச்சர்டாஸ்மாக் ஊழியர்களுக்கு நாளைமுதல் ஊதிய உயர்வு!தவெக அரசுடன் சென்னை மேயர் சேர்ந்து செயல்படுவதில்லை: ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டுகொலைக்களமாக மாறுகிறதா தமிழ்நாடு? டிடிவி தினகரன் கேள்வி! தேர்தல் வழக்குகள்: முதல்வர் விஜய் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை தள்ளிவைப்புகொளத்தூரில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு: தீர்ப்புக்காக ஒத்திவைப்பு 2026 பிரதமர் வேட்பாளர் யார்? தமிழக அரசியலில் உருவான சூறாவளி!தமிழ்நாடு மின் தொடரமைப்பு கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்: முதல்வர் அறிவிப்புபால் கொள்முதல் விலை மேலும் ரூ.3 உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்புநேபாள வெள்ளம்: பலி எண்ணிக்கை 903ஆக உயர்வு! முதல்வர் விஜய்க்கு பிரதமராகும் எண்ணம் துளியும் கிடையாது: வைகோ சாலை விரிவாக்கம்! விரைவில் விரிவான திட்ட அறிக்கை வெளியிடப்படும் - ஆதவ் அர்ஜுனா தகவல் கொடியேற்றத்துடன் தொடங்கியது திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணித் திருவிழா! ஹோர்முஸ் நீரிணையில் ஈரானிய ராக்கெட் ஏவுதளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்ஆன்லைன் செயலி மூலம் மோசடி: செப்டிக் டேங்கில் பதுக்கப்பட்ட பணம்? போலீஸார் உடைத்து சோதனை

நேபாள தூதரகத்தில் ராஜ்நாத் சிங்! இரங்கல் குறிப்பேட்டில் கையெழுத்து!

நேபாள தூதரகத்துக்கு ராஜ்நாத் சிங் நேரில் சென்றது பற்றி...

Rajnath singh

ராஜ்நாத் சிங் - PTI

Published On :31 ஆகஸ்ட் 2026, 2:27 pm IST

தில்லியில் உள்ள நேபாள தூதரகத்துக்கு திங்கள்கிழமை நேரில் சென்ற மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இரங்கல் குறிப்பேட்டில் கையெழுத்திட்டு இரங்கல் தெரிவித்தார்.

நேபாள - திபெத் எல்லையில் பனிப்பாறைகள் உடைந்து நேபாளத்தின் போடே கோஷி ஆற்றில் கடந்த ஆக. 26 ஆம் தேதி திடீரென பெரு வெள்ளம் ஏற்பட்டது.

இந்த பேரிடரில் ஆயிரக்கணக்கானோர் சிக்கிய நிலையில், இதுவரை 900-க்கும் அதிகமான சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்னும், காணாமல் போன 4,200 பேரைத் தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், தில்லியில் உள்ள நேபாள தூதரகத்துக்கு திங்கள்கிழமை நேரில் சென்ற மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய அரசு சார்பில் இரங்கல் குறிப்பேட்டில் கையெழுத்திட்டு அதிகாரப்பூர்வமாக இரங்கலை பதிவு செய்தார்.

ராஜ்நாத் சிங் தெரிவித்திருப்பதாவது:

”ஆகஸ்ட் 26 அன்று ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கினால் நேரிட்ட உயிரிழப்புகள் மற்றும் பெரும் சேதங்கள் குறித்து, நேபாள மக்களுக்கும் அந்நாட்டு அரசாங்கத்திற்கும் இந்திய அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பாக எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தத் துயரமான இயற்கை பேரிடர், நேபாள குடிமக்களுடன் இந்தியர்கள் உள்ளிட்ட பல்வேறு நாட்டினரையும் பாதித்துள்ளது. இத்துயர நிகழ்வில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்காக பிரார்த்திக்கிறோம். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டிக்கொள்கிறோம்.

நெருங்கிய நண்பராகவும், கூட்டாளியாகவும், சுக, துக்கங்களில் பங்கெடுக்கும் தோழராகவும் இந்தியா எப்போதும் நேபாளத்துக்குத் துணையாக இருந்து வந்துள்ளது. இந்த கடினமான சூழலிலும், எங்கள் நேபாள சகோதர சகோதரிகளுடன் தோளோடு தோள் நின்று, தேடுதல், மீட்பு மற்றும் மறுவாழ்வுப் பணிகளில் நேபாளத்துக்குத் தேவையான உதவிகளை வழங்க நாங்கள் உறுதியுடன் இருக்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Summary

Rajnath Singh at the Nepal Embassy! Signs the condolence book!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.