அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!1984 கலவர வழக்கு காங். முன்னாள் எம்.பி சஜ்ஜன் குமார் காலமானார்!நெல்லையில் 4 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகருக்கு மரண தண்டனை! நீட் விலக்கு, ஒசூரிலிருந்து மெட்ரோ ரயில்! முதல்வர் விஜய் பேச்சுமனசாட்சியே இல்லாத நிறுவனம் என்.எல்.சி.! செளமியா அன்புமணி காட்டம்! நெல்லையில் 4 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகருக்கு மரண தண்டனை!தில்லியில் பாகிஸ்தான் தூதரகத்தின் ஆக்கிரமிப்புகளை இடித்த மத்திய அரசு!‘ஒண்டிவீரன் புகழ் என்றும் நிலைத்தோங்கட்டும்’: முதல்வர் விஜய் புகழஞ்சலிதங்கம் விலை மீண்டும் அதிரடி உயர்வு! அமெரிக்காவில் விமானம் - காவல்துறை ஹெலிகாப்டர் மோதி விபத்து!அமித் ஷா தலைமையில் தென் மாநில முதல்வர்கள் மாநாடு தொடங்கியது!

தில்லியில் ராஜ்நாத் சிங் உடன் ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சர் சந்திப்பு!

தில்லியில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கை ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சர் சந்தித்துள்ளது குறித்து...

Japanese Defence Minister

மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உடன் ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் ஷிங்சிரு கொய்சுமி... - எக்ஸ்

Published On :20 ஆகஸ்ட் 2026, 4:54 pm IST

தில்லியில், மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கை ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சர் ஷிங்சிரு கொய்சுமி நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.

இந்தியா மற்றும் ஜப்பான் இடையிலான பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்தும் முயற்சியாக, ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சர் ஷிங்சிரு கொய்சுமி அரசு முறைப் பயணமாக நேற்று (ஆக. 19) மும்பை வந்தடைந்தார்.

மும்பையிலுள்ள கடற்படைத் தளத்துக்குச் சென்ற அவர் அங்கு உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் சென்னை எனும் கப்பலை பார்வையிட்டார். மேலும், இந்தியக் கடற்படை அதிகாரிகளுடன் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து உரையாடினார்.

இதையடுத்து, இன்று தில்லி சென்றடைந்த ஜப்பானிய அமைச்சர் கொய்சுமியை, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவத் தலைமைத் தளபதி தீரஜ் சேத், கடற்படைத் தளபதி கிருஷ்ணா சுவாமிநாதன் மற்றும் விமானப் படைத் தளபதி ஏ.பி. சிங் ஆகியோர் வரவேற்றனர்.

இந்த நிலையில், இந்திய - பசிபிக் பகுதியில் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான இருநாடுகளின் கூட்டுறவுகள் குறித்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உடன் ஜப்பானிய அமைச்சர் கொய்சுமி பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சர் ஷிங்சிரு கொய்சுமி தில்லியில் உள்ள தேசிய போர் நினைவுச் சின்னத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

Summary

Japan's Defense Minister Shinsuke Koizumi met with Union Defence Minister Rajnath Singh in Delhi and held discussions.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.