உஸ்பெகிஸ்தானில் பிரதமர் மோடி தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி 25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

கேகேஆர் அணியின் கிண்டல் பதிவுக்குப் பதிலளித்த மும்பை இந்தியன்ஸ்..! சாதனைக்குமேல் சாதனை!

கேகேஆர் அணியின் கிண்டல் பதிவுக்குப் பதிலளித்த மும்பை இந்தியன்ஸ் அணி குறித்து...

Rohit Sharma, Ryan Rickelton.

ரோஹித் சர்மா, ரியான் ரிக்கல்டன். - படம்: மும்பை இந்தியன்ஸ்.

Published On :30 மார்ச் 2026, 12:07 pm IST

ஐபிஎல் போட்டியின் 2-ஆவது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை ஞாயிற்றுக்கிழமை இரவு வென்றது. இந்தப் போட்டியில் பல சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.

டாஸ் வென்ற மும்பை பந்துவீச, கொல்கத்தா 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 220 ரன்கள் எடுக்க, மும்பை 19.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 224 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் வான்கடே திடலில் கேகேஆர் அணி 220/4 ரன்கள் தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்து சாதனை படைத்தது. இதனை கேகேஆர் அணி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தது.

அடுத்து விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிகரமாக இலக்கை 224/4 அடைந்தது. போட்டிக்குப் பிறகு மும்பை அணி கேகேஆரின் பதிவினைப் பகிர்ந்து அதன் பாணியிலேயே பதிலளித்திருக்கிறது.

அந்தப் பதிவில், ”சாதனை எச்சரிக்கை: ஐபிஎல் வரலாற்றில் எங்களது அதிகபட்ச சேஸிங்கை நிறைவு செய்துள்ளோம்” எனக் குறிப்பிட்டுள்ளது.

இந்தப் போட்டியில் வென்றதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 14 ஆண்டுகளில் தனது முதல் போட்டியில் வென்று வரலாறு படைத்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் வரலாற்றிலேயே இரண்டாவது மிகப்பெரிய பார்ட்னர்ஷிப்பை ரோஹித் சர்மா - ரிக்கல்டன் (148 ரன்கள்) நிகழ்த்தி சாதனை படைத்துள்ளார்கள். இதற்கு முன்பாக, 2012ல் டிவைன் ஸ்மித் - சச்சின் இணைந்து 163 ரன்கள் எடுத்திருந்தார்கள்.

Summary

Mumbai Indians Responds to KKR's Sarcastic Post! Record After Record!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.