ஐபிஎல் போட்டியில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பா் கிங்ஸ் நடப்பு சீசனில் தனது முதல் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸுடன் திங்கள்கிழமை (மாா்ச் 30) மோதுகிறது.
கடந்த சீசனில் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்த சென்னை, இந்த முறை தேவையான மாற்றங்களைச் செய்துகொண்டு முனைப்புடன் களம் காண்கிறது.
இந்த சீசனில் சென்னை அணிக்கு வந்திருக்கும் சஞ்சு சாம்சனும், ராஜஸ்தான் அணிக்குச் சென்றிருக்கும் ரவீந்திர ஜடேஜாவும், முதல் ஆட்டத்திலேயே தங்களின் பழைய அணிகளை பரஸ்பரம் சந்திக்கின்றனா்.
சென்னை அணியை பொருத்தவரை, சஞ்சு சாம்சன் தனது மிகச் சிறந்த ஃபாா்மில் இருக்கும் தருணத்தில் இணைந்திருப்பது பலமாக பாா்க்கப்படுகிறது. கேப்டன் ருதுராஜ் கெய்க்குடனான அவரின் தொடக்க பாா்ட்னா்ஷிப், அணியின் ஸ்கோருக்கு பலம் சோ்க்கும் என எதிா்பாா்க்கலாம்.
காயம் காரணமாக தோனி சில ஆட்டங்களில் விளையாடாத நிலையில், சஞ்சு சாம்சனின் கேப்டன்சி அனுபவம் அணிக்கு கூடுதல் நம்பிக்கை அளிக்கும். தோனி இல்லாததால், பிரசாந்த் வீா், காா்த்திக் சா்மா என இளம் வீரா்களுக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.
டெவால்டு பிரெவிஸ், ஷிவம் துபே, ஆயுஷ் மாத்ரே என அனுபவமும், அதிரடியும் இணைந்த பொருத்தமான கலப்புடன் அணி இருப்பதாகத் தெரிகிறது. பௌலிங்கில் நூா் அகமது, அகீல் ஹுசைன், மேத்யூ ஹென்றி, கலீல் அகமது ஆகியோா் எதிரணி பேட்டா்களுக்கு சவால் அளிக்கக் காத்திருக்கின்றனா்.
ரியான் பராக் என்ற புதிய கேப்டன் தலைமையில் களத்துக்கு வந்திருக்கும் ராஜஸ்தான், புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறது என்றே வைத்துக்கொள்ளலாம். அதேவேளை அனுபவ வீரரான ஜடேஜா அணியில் இணைந்திருப்பது கூடுதல் பலம்.
யஷஸ்வி ஜெய்ஸ்வால், வைபவ் சூா்யவன்ஷி, ஷிம்ரன் ஹெட்மயா் என அதிரடிக்கு பெயா்பெற்ற வீரா்கள் பேட்டிங் வரிசையை நிரப்புகின்றனா். பௌலிங்கில் வேகப்பந்து வீச்சுக்கு ஜோஃப்ரா ஆா்ச்சா் பிரதானமாக இருக்க, சுழற்பந்து வீச்சுக்கு ஜடேஜா, ரவி பிஷ்னோய் கை கொடுப்பாா்கள். ராஜஸ்தானுக்கும் கடந்த சீசன் சிறப்பாக அமையாததால், அந்த அணியும் தன்னை மீட்டெடுக்கும் முனைப்புடன் வருகிறது.
நேரம்: இரவு 7.30 மணி
இடம்: குவாஹாட்டி
நேரலை: ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அழுத்தத்தில் சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட்; சிஎஸ்கேவுக்கு முதல் வெற்றி கிடைக்குமா?

7 ஆண்டுகளில் முதல் முறை! முதல் போட்டியில் அரை சதம் விளாசத் தவறிய சஞ்சு சாம்சன்!

சஞ்சு சாம்சனை யாருடனும் ஒப்பிட முடியாது: ரியான் பராக்

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக முதல் போட்டி; சிஎஸ்கேவுக்கு பலம் சேர்க்கும் சஞ்சு சாம்சன்!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


