பிரதமரின் ஆலோசனைக் கூட்டம்: மம்தா கலந்துகொள்ளவில்லை
கரோனா பரவல் குறித்து மாநில முதல்வர்களுடனான பிரதமரின் ஆலோசனைக் கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கலந்துகொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


கரோனா பரவல் குறித்து மாநில முதல்வர்களுடனான பிரதமரின் ஆலோசனைக் கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கலந்துகொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு பதிலான தலைமைச் செயலாளர் அலபன் பாண்டியோபாத்யாய கலந்துகொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கரோனா பரவல் அதிகரித்து வருவதால், மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
இந்தக் கூட்டத்ததில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கலந்துகொள்ளவில்லை. அதற்கு பதிலாக அம்மாநில தலைமைச் செயலாளர் கலந்துகொள்ளவுள்ளார்.
இதேபோன்று தமிழகத்தில் தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் இந்தக் கூட்டத்தில் மாநில அரசின் சார்பில் தலைமைச் செயலாளா் ராஜீவ் ரஞ்சன் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு, தமிழகத்தில் அமல்படுத்தப்பட உள்ள கட்டுப்பாடுகள் குறித்த முக்கிய அறிவிப்பை தமிழக அரசு வெளியிடும் எனத் தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...