ராஜஸ்தானுக்கு மேலும் 30 லட்சம் டோஸ் தடுப்பூசி வழங்க வேண்டும்: பிரதமருக்கு ராஜஸ்தான் முதல்வர் கடிதம்
ராஜஸ்தானுக்கு மேலும் 30 லட்சம் டோஸ் தடுப்பூசி வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கடிதம் எழுதியுள்ளார்.


ராஜஸ்தானுக்கு மேலும் 30 லட்சம் டோஸ் தடுப்பூசி வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கடிதம் எழுதியுள்ளார்.
இந்தியாவில் கரோனா பாதிப்பு கடந்த சில வாரங்களாக மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை 1.31 லட்சத்தைக் கடந்துள்ளது. குறிப்பாக மகாராஷ்டிரம், சத்தீஸ்கா், கா்நாடகம், உத்தர பிரதேசம், தில்லி, மத்திய பிரதேசம், கேரளம், தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் தினசரி கரோனா பாதிப்பு பிற பகுதிகளைவிட அதிகரித்து காணப்படுகிறது.
உயிரிழப்பவா்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, மாநிலங்கள் பல்வேறு கட்டுப்பாடு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ராஜஸ்தானில் நேற்று ஒரேநாளில் 3,526 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 20 பேர் பலியாகியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி ராஜஸ்தானில் 21,132 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர்.
இந்த நிலையில் ராஜஸ்தானுக்கு மேலும் 30 லட்சம் டோஸ் தடுப்பூசி வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கடிதம் எழுதியுள்ளார். அடுத்த 2 நாள்களுக்கு மட்டுமே கரோனா தடுப்பூசி இருப்பு தற்போது உள்ளதாகவும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...