இந்தியாவில் இருந்து இதுவரை 84 நாடுகளுக்கு 6 கோடிக்கும் மேற்பட்ட கரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்தார்.
கரோனா தொற்று அதிகரித்துவருவதன் மத்தியில் நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பூடான், வங்கதேசம், நேபாளம், மாலத்தீவுகள், இலங்கை, ஆப்கானிஸ்தான், மோரீஷஸ், மியான்மா், செஷல்ஸ் ஆகிய நாடுகளுக்கு கரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கியுள்ளது.
இந்நிலையில் இதுதொடர்பாக வெள்ளிக்கிழமை பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், இதுவரை 84 நாடுகளுக்கு 6 கோடியே 45 லட்சம் கரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
மேலும் இதுவரை முன்களப் பணியாளர்கள் 98 லட்சம் பேர் முதல் தவணை கரோனா தடுப்பூசியையும், அவர்களில் 45 லட்சம் பேர் இரண்டாம் தவணை கரோனா தடுப்பூசியையும் செலுத்திக் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி நாட்டில்9 கோடியே 43 லட்சம் பேர் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதுரை மத்திய தொகுதியில் சுந்தர். சி வேட்புமனு தாக்கல்! | ADMK | BJP

சூர்யகுமார் யாதவ் அரைசதம்; தில்லி கேபிடல்ஸுக்கு 163 ரன்கள் இலக்கு!

சட்டப்பேரவைத் தேர்தலில் திருமாவளவன் போட்டியிடுவதில் குழப்பம்?!
பாஜக வாஷிங்மெஷினுக்குள் இபிஎஸ்: கனிமொழி விமர்சனம்
வீடியோக்கள்

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு

