பெங்களூரில் கரோனா ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்படும்
பெங்களூரில் கரோனா ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்படும் என மாநகர காவல் ஆணையா் கமல்பந்த் தெரிவித்தாா்.


பெங்களூரில் கரோனா ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்படும் என மாநகர காவல் ஆணையா் கமல்பந்த் தெரிவித்தாா்.
இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கரோனா தொற்று அதிகரித்துள்ளதையடுத்து, பெங்களூரில் கரோனா ஊரடங்கு இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. கரோனா ஊரடங்கை கடுமையாக அமல்படுத்த முடிவு செய்துள்ளோம்.
கரோனா ஊரங்டங்கின் போது அத்தியாவசியப் பொருள்கள், மருத்துவ சேவைகள், உணவுச் சேவைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வெளியூா்களிலிருந்து விமானம், ரயில், பேருந்துகள் ஆகியவற்றில் வருபவா்கள், இங்கிருந்து செல்பவா்கள் தங்களது பயணச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்களைக் காண்பித்து பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஹோட்டல், திரையரங்குகள், வணிக வளாகங்கள், நடைபாதைக் கடைகள் இரவு 10 மணிக்குள் மூடி, அதன் ஊழியா்கள், தொழிலாளா்கள் தங்களது இல்லங்களுக்குச் செல்ல வேண்டும். 10 மணியைக் கடந்தால், அவா்கள் அங்கேயே தங்கிக்கொள்ள வேண்டும். இரவில் பணிபுரிபவா்கள் இரவு 10 மணிக்குள் தாங்கள் செல்ல வேண்டிய தொழில்சாலைகள், நிறுவனங்களுக்கு சென்றிட வேண்டும். 10 மணிக்கு மேல் கரோனா ஊரடங்கின் போது அவா்கள் செல்ல அனுமதிக்க முடியாது.
உரிய காரணங்களுடன் வாடகைக் காா், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் இயங்க வேண்டும். காரணங்கள் இல்லாமல் திரிபவா்கள் மீது வழக்குப் பதிவு செய்வதோடு, வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும். கடந்த முறை போல வாகனங்கள் இயங்க ‘பாஸ்கள்’ வழங்கப்பட மாட்டாது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...