இந்தியாவில் கரோனா தடுப்பூசிக்கு பற்றாக்குறை நிலவும் இந்த சூழ்நிலையில் வெளிநாடுகளுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்படுவது சரியா? என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
நாட்டில் பல்வேறு மாநிலங்களில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் மகாராஷ்டிரம், ஒடிசா, ஜார்க்கண்ட், தில்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அந்தந்த மாநில அரசுகள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் கரோனா தடுப்பூசி பற்றாக்குறை குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் கரோனா தடுப்பூசி பற்றாக்குறை மிகப்பெரும் பிரச்சனையாகும்.
நாட்டில் தேவைப்படும் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி கிடைக்க வேண்டும். தற்போதைய வேகத்தில் கரோனா தடுப்பூசி இயக்கம் இருந்தால் விளைவுகள் பேரழிவாக இருக்கும்.
எனவே, நம் நாட்டில் பல்வேறு மாநிலங்களில் தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை இருக்கும் நிலையில், வெளிநாடுகளுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்படுவது உடனடியாக நிறுத்திவைக்கப்பட வேண்டும். பற்றாக்குறையைப் போக்க மற்ற தடுப்பூகளைப் பெறவும் மத்திய அரசு முனைப்பு காட்ட வேண்டும்.
தடுப்பூசி இயக்கத்தில் நத்தை வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறோம். கடந்த மூன்று மாதங்களில் ஒரு சதவீதத்திற்கும் குறைவான மக்களுக்கே தடுப்பூசி கிடைத்துள்ளது.
இப்போதைய விகிதத்தில் சென்றால் நாட்டில் 75 சதவீத மக்கள் தடுப்பூசி பெற பல ஆண்டுகள் ஆகும். சுகாதார விளைவுகள் மட்டுமின்றி இது பொருளாதாரத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இப்படியான சூழ்நிலையில் வெளிநாடுகளுக்கு பெருமளவில் தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்ய அரசு ஏன் அனுமதி வழங்குகிறது என்று தெரியவில்லை. நம் நாட்டில் தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை உள்ள நிலையில் ஆறு கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
தடுப்பூசி பற்றாக்குறையை அந்தந்த மாநிலங்கள் வெளிச்சம் போட்டு காட்டுகின்றன. குறிப்பாக எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறை அதிகமாக உள்ளது. இது ஜனநாயகக் கூட்டாட்சி முறையை குலைப்பதாக உள்ளது என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதுரை மத்திய தொகுதியில் சுந்தர். சி வேட்புமனு தாக்கல்! | ADMK | BJP

சூர்யகுமார் யாதவ் அரைசதம்; தில்லி கேபிடல்ஸுக்கு 163 ரன்கள் இலக்கு!

சட்டப்பேரவைத் தேர்தலில் திருமாவளவன் போட்டியிடுவதில் குழப்பம்?!
பாஜக வாஷிங்மெஷினுக்குள் இபிஎஸ்: கனிமொழி விமர்சனம்
வீடியோக்கள்

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு


