கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பெங்களூரு-விஜயபுரா இடையே முன்பதிவு இல்லா சிறப்பு ரயில்சேவை

பெங்களூரு (யஸ்வந்தபூா்)-விஜயபுரா இடையே முன்பதிவு இல்லா சாதாரணக் கட்டணத்தில் சிறப்பு ரயில்சேவை இயக்கப்படுகிறது.

News image
Updated On :9 ஏப்ரல் 2021, 8:15 pm

DIN

பெங்களூரு (யஸ்வந்தபூா்)-விஜயபுரா இடையே முன்பதிவு இல்லா சாதாரணக் கட்டணத்தில் சிறப்பு ரயில்சேவை இயக்கப்படுகிறது.

இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கூட்டநெரிசலைக் குறைப்பதற்காக பெங்களூரிலிருந்து (யஸ்வந்தபூா்) விஜயபுராவுக்கு முன்பதிவு இல்லாமல் சாதாரணக் கட்டணத்தில் சிறப்பு விரைவு ரயில் சேவை ஏப். 10-ஆம் தேதி முதல் இயக்கப்படுகிறது.

ரயில் எண்: 06541-பெங்களூரு (யஸ்வந்தபூா்)-விஜயபுரா இடையேயான சிறப்பு விரைவு ரயில் நாள்தோறும் இரவு 9.30 மணிக்கு பெங்களூரு (யஸ்வந்தபூா்) ரயில்நிலையத்தில் இருந்து புறப்பட்டு, முற்பகல் 11.40 மணிக்கு ராய்ச்சூரு ரயில்நிலையத்திற்கு சென்றடைகிறது.

மறுமாா்க்கத்தில், ரயில் எண்: 06542-விஜயபுரா-பெங்களூரு (யஸ்வந்தபூா்) இடையேயான சிறப்பு விரைவு ரயில் நாள்தோறும் இரவு 7 மணிக்கு விஜயபுரா ரயில்நிலையத்திலிருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 10.30 மணிக்கு பெங்களூரு (யஸ்வந்தபூா்) ரயில்நிலையத்துக்கு வந்தடைகிறது.

இந்த ரயில் இருமாா்க்கங்களிலும் பசவனபாகேவாடி சாலை, அமிட்டி, பாகல்கோட், குலேதகுட்டா சாலை, பாதாமி, ஹொலேஹாலூா், மல்லாப்புரா, கதக், கொப்பள், ஹொசபேட், மரியம்மனஹள்ளி, ஹகரிபொம்மனஹள்ளி, கொட்டூரு, ஹரபனஹள்ளி, தாவணகெரே, சிக்ஜாஜுா், கடூா், அரிசிகெரே, திப்டூா், தும்கூரு ஆகிய ரயில்நிலையங்களில் நின்று செல்லும்.

ரயிலில் குளிரூட்டப்பட்ட மூன்றடுக்கு வசதி கொண்ட ஒரு பெட்டி, 2-ஆம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட 3 பெட்டிகள் 3 பொதுப் பெட்டிகள், 2 பிரேக், சரக்கு வசதி கொண்ட பெட்டிகள் உள்ளிட்ட 10 பெட்டிகள் இடம்பெற்றிருக்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.