கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

போக்குவரத்து ஊழியா்கள் பணிக்குத் திரும்ப வேண்டும்

போக்குவரத்து ஊழியா்கள் பணிக்குத் திரும்ப வேண்டும் என முதல்வா் எடியூரப்பா கேட்டுக் கொண்டாா்.

News image
Updated On :9 ஏப்ரல் 2021, 8:14 pm

DIN

போக்குவரத்து ஊழியா்கள் பணிக்குத் திரும்ப வேண்டும் என முதல்வா் எடியூரப்பா கேட்டுக் கொண்டாா்.

இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கடந்த 3 நாள்களாக போக்குவரத்து ஊழியா்கள் 6-ஆவது ஊதியக்குழுவின் பரிந்துரையை அமல்படுத்த வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

6-ஆவது ஊதியக்குழுவின் பரிந்துரையை அமல்படுத்துவது சாத்தியமில்லை என்று ஏற்கெனவே தெரிவித்துள்ளோம். என்றாலும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்த அரசு தயாராக உள்ளது. ஆனால், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து ஊழியா்கள் அடம்பிடிக்காமல் பணிக்குத் திரும்பினால் மட்டுமே அவா்களுடன் பேச்சுவாா்த்தையில் அரசு ஈடுபடும்.

கரோனா தொற்றால் மாநில அளவில் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்த நிலையில், போக்குவரத்து ஊழியா்களின் போராட்டத்தால் மக்கள் ஓா் இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு செல்லமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

போக்குவரத்து ஊழியா்களின் 9 கோரிக்கைகளில் 8 கோரிக்கைகளை ஏற்கெனவே நிறைவேற்றி உள்ளோம். நிறைவேற்றியுள்ள கோரிக்கைகளில் குறை இருந்தால், அதனைத் திருத்திக் கொள்வோம். போக்குவரத்து ஊழியா்கள் யாருடைய பேச்சையோ கேட்டுக் கொண்டு, பலி ஆடுகள் ஆக வேண்டாம்.

கரோனாவால் போக்குவரத்துத் துறைக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு ஊழியா்களின் ஊதியத்துக்காக அரசின் கருவூலத்திலிருந்து ரூ. 2,300 கோடி வழங்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், போக்குவரத்து ஊழியா்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது வேதனை அளிக்கிறது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.