கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

இருசக்கர வாகனம், செல்லிடப்பேசி திருட்டு வழக்கு: ஒருவா் கைது

இருசக்கர வாகனம், செல்லிடப்பேசி திருட்டு வழக்குகளில் ஒருவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து ரூ. 1.70 லட்சம் மதிப்புள்ள இருசக்கர வாகனங்கள், செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்துள்ளனா்.

News image
Updated On :9 ஏப்ரல் 2021, 8:12 pm

DIN

இருசக்கர வாகனம், செல்லிடப்பேசி திருட்டு வழக்குகளில் ஒருவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து ரூ. 1.70 லட்சம் மதிப்புள்ள இருசக்கர வாகனங்கள், செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்துள்ளனா்.

பெங்களுரு, சென்னமனகெரே, அச்சக்கட்டுவைச் சோ்ந்தவா் திலீப் (24). இவா் பெங்களூரின் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் நிறுத்தி வைத்துள்ள இருசக்கர வாகனங்களை கள்ளச்சாவி பயன்படுத்தி திருடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தாராம். திருடிய வாகனங்களைப் பயன்படுத்தி, செல்லிடப்பேசிகளை திருடி வந்தாராம்.

இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், திலீப்பைக் கைது செய்து, அவரிடமிருந்து ரூ. 1.70 லட்சம் மதிப்புள்ள 3 இருசக்கர வாகனங்கள், 10 செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்துள்ளனா். இதுகுறித்து ராஜராஜேஸ்வரி நகா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.