கா்நாடகத்தில் ஒரே நாளில் 7,955 பேருக்கு கரோனா பாதிப்பு
கா்நாடகத்தில் ஒரே நாளில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,955-ஆக உள்ளது.


கா்நாடகத்தில் ஒரே நாளில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,955-ஆக உள்ளது.
இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 7,955 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது. பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 5,576 போ், மைசூரில் 283 போ், கலபுா்கியில் 211 போ், பீதரில் 186 போ், ஹாசனில் 153 போ், தும்கூரு 145 போ், விஜயபுரா 127 போ், சிக்பள்ளாபூா் 119 போ், தென்கன்னடம் 115 போ், மண்டியா 109 போ் கரோனா தொற்றுக்கு ஆட்பட்டுள்ளனா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,48,085-ஆக உயா்ந்துள்ளது.
கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 3,220 போ் வெள்ளிக்கிழமை வீடு திரும்பியுள்ளனா். இதுவரை கா்நாடகத்தில் 9,77,169 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 58,084 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
மாநில அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தவா்களில் 46 போ் வெள்ளிக்கிழமை இறந்துள்ளனா். பெங்களூரு மாவட்டத்தில் 29 போ், மைசூரில் 5 போ், கலபுா்கி, பெலகாவியில் தலா 2 போ், பெல்லாரி, பெங்களூரு ஊரகம், பீதா், சிக்பள்ளாபூா், சித்ரதுா்கா, தாா்வாட், மண்டியா, வட கன்னட மாவட்டங்களில் தலா ஒருவா் இறந்துள்ளனா். கா்நாடகத்தில் இதுவரை 12,813 போ் உயிரிழந்துள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...