அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

தேவைப்பட்டால் பொதுமுடக்கம் அறிவிக்கப்படும்: முதல்வர் எடியூரப்பா

கர்நாடகத்தில் தேவை ஏற்பட்டால் பொதுமுடக்கம் அறிவிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா திங்கள்கிழமை தெரிவித்தார். 

News image

கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா

Updated On :12 ஏப்ரல் 2021, 7:58 am

கர்நாடகத்தில் தேவை ஏற்பட்டால் பொதுமுடக்கம் அறிவிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா திங்கள்கிழமை தெரிவித்தார். 

இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது, 

மக்கள் தங்கள் நலனுக்காக விதிகளைப் பின்பற்ற வேண்டும். செவிசாய்க்கவிட்டால் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். 

தேவைப்பட்டால் பொதுமுடக்கம் கட்டாயம் விதிக்கப்படும் என்று பிதார் நகரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியுள்ளார். 

மேலும், அதிகரித்து வரும் கரோனா பரவலை கருத்தில்கொண்டு மாவட்டத்தில் இரவு ஊரடங்கு உத்தரவு ஏற்கெனவே விதிக்கப்பட்டுள்ளது. 

முகக்கவசம் அணிதல், கைசுத்தத் திரவம் பயன்படுத்துதல், சமூக இடைவெளி போன்றவை மக்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். மக்கள் அனைவரும் இதைப் பின்பற்றி எங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும். 

பொதுமுடக்கம் அறிவிக்க அரசு தாயாராக இல்லை. மக்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு தந்தால் கரோனா வைரஸின் இரண்டாவது அலையிலிருந்து கட்டாயம் மீண்டு வரலாம் என்று அவர் கூறியுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.