எழுபத்தைந்து வயதாகும் குடியரசுத் தலைவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் கடந்த மாதம் 26-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டாா். அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அவருக்கு இதய அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவருக்கு கடந்த மாா்ச் 30-ஆம் தேதி இதய அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னா், மருத்துவமனையில் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த அவா், முழுமையாக குணமடைந்து குடியரசுத் தலைவா் மாளிகைக்கு திங்கள்கிழமை திரும்பினாா்.