யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

தமிழ்ப் புத்தாண்டு: பிரதமர் மோடி வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடி தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 

News image
பிரதமர் மோடி
Updated On :14 ஏப்ரல் 2021, 2:49 am

DIN

பிரதமர் நரேந்திர மோடி தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 

தமிழ் மாதப் பிறப்பான சித்திரை 1 ஆம் தேதி இன்று தமிழ் புத்தாண்டு உலகம் முழுவதுமுள்ள தமிழர்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் வசிக்கும் தமிழர்கள் இன்று தமிழ் புத்தாண்டை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். 

இதையொட்டி அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக பிரதமர் மோடி தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 

தமிழகத்து சகோதர, சகோதரிகளுக்கும், உலகம் எங்கும் உள்ள தமிழர்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். தமிழ் பண்பாட்டின் மகத்துவம் தொடர்ந்து ஒளிரட்டும்.

புத்தாண்டு ஒவ்வொருவரின் வாழ்விலும் ஆரோக்கியத்தையும், செல்வத்தையும், மகிழ்ச்சியையும் நிறைக்க இந்த மகிழ்ச்சியான திருநாளில் பிரார்த்திக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். 

இன்று புத்தாண்டு கொண்டாடும் மற்ற மாநில மக்களுக்கும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.