மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

ஒடிசாவில் 9, 11 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி

ஒடிசா மாநிலத்தில் 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்கள் நடப்பாண்டு தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது

News image

ஒடிசாவில் தேர்வின்றி தேர்ச்சி: உற்சாகத்தில் மாணவர்கள்

Updated On :15 ஏப்ரல் 2021, 12:32 pm

ஒடிசா மாநிலத்தில் 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்கள் நடப்பாண்டு தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது

கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதால் கல்வி நிலையங்கள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது. 

எனினும் கரோனா தொற்று பரவல் நிலைகளுக்கேற்ப பள்ளிகள் திறக்கப்பட்டு கட்டுப்பாடுகளுடன் செயல்பட்டன. தற்போது மீண்டும் அதிகரித்துவரும் நிலையில் ஒடிசா மாநிலத்தில் 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக மாநில அரசு வியாழக்கிழமை அறிவித்தது. 

மேலும் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் நிறுத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் 2021-22 கல்வியாண்டுக்கான வகுப்புகளை இணைய வழியில் நடத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது. 

கரோனா தொற்று பரவலைக் கருத்தில் கொண்டு ஏப்ரல் 30 வரை நேரடி வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த மாதம் ஒன்றாம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் நடப்பு கல்வியாண்டு தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.