புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

ஒரே நாளில் 2 லட்சத்தைக் கடந்த கரோனா பாதிப்பு; 1,038 பேர் பலி

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 1,038 பேர் கரோனாவுக்குப் உயிரிழந்துள்ளனர்.

News image
Updated On :15 ஏப்ரல் 2021, 4:15 am


நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 1,038 பேர் கரோனாவுக்குப் உயிரிழந்துள்ளனர்.

நாட்டில் நாள்தோறும் கரோனா பெருந்தொற்று அதிகரித்து வரும் நிலையில், இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் 2 லட்சத்திற்கும அதிகமானோருக்கு தொற்று உறுதி கண்டறியப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,00,739 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்ட  93,528 பேர் புதிதாக குணமடைந்து வீடு திரும்பியதால், இதுவரை மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 1,24,29,564-ஆக அதிகரித்துள்ளது.

கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு 14,71,877 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் புதிதாக கரோனா பாதித்த 1,038 பேர் பலியானதைத் தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 1,73,123-ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 11 கோடியே 44 லட்சத்து 93 ஆயிரத்து 238 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.